சொல்லன்றி எதுவுமற்றவன்! – 239

அதேபோல நாட்டார் தெய்வங்களும் அதிகமாக உங்கள் படைப்புகளில் வருகிறதே?

ஆமாம். பெருந்தெய்வங்களுக்கு முன்னாலேயே எனக்கு என் ஐயாவும், அம்மாவும் சிறுதெய்வங்களைத்தான் அறிமுகம் செய்துவைத்தார்கள். அதிலும் குறிப்பாக, எங்கள் குடும்ப தெய்வமான வடுவச்சி அம்மனையும், குலதெய்வமான பெரியாயி அம்மனையும், ஊர்க்காவல் தெய்வங்களான பொறடியாத்தா, வேடியப்பன், முனியப்பன், ஊமைவேடியப்பனையும்தான் அறிமுகம் செய்தார்கள்.

தெய்வங்களை பொதுவாக நான்காகப் பிரிப்பார்கள். ஒன்று, குடும்ப தெய்வம். ஒரு குடும்பத்துக்கு மட்டுமே உரியது. இரண்டு, குலதெய்வம். ஒரு குலத்துக்கானது. மூன்று, காவல் தெய்வங்கள். ஓர் ஊரிலுள்ள அனைவருக்குமானது. நான்காவதுதான் சிவன், விஷ்ணு, முருகன், விநாயகர், பார்வதி, லட்சுமி… என்று சொல்லக்கூடிய பெருந்தெய்வங்கள். ஒட்டுமொத்த மனிதர்களுக்குமானது.

இந்நான்கில் எதை வழிபடாமல் விட்டாலும் விடலாம், முதல் மூன்றை அதிலும் குறிப்பாக, முதல் இரண்டை வழிபடாமல் விடுவதை பெரும் பாவம் என்பார்கள் ஊரில். ஏனெனில் அத்தெய்வங்கள் நம்மில் ஒருவராக இருந்து, நமக்காக உயிர் நீத்த நம் முன்னோர்கள்.

முன்னோர் வழிபாடு என்பது நம் மண்ணில் ஒருபோதும் தவிர்க்க முடியாத; தவிர்க்கக் கூடாத ஒன்று. இதை இத்தனை ஆண்டுகளாக பின்பற்றி வருபவன். அதனால், அது என்னை அறியாமலேயே என் படைப்புகளில் வந்துவிடுகின்றன.

[இன்னும்]

*

சொல்லன்றி எதுவுமற்றவன்! – 238

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=