சொல்லன்றி எதுவுமற்றவன்! – 233
ஆக, பணம் இருந்தால் விதிகள் ஒரு பொருட்டல்ல. அப்படித்தானே?
(‘ஆமாம்’ என்று உறுதியாக தலையாட்டியவர்)
இங்கே பெரும்பாலான விஷயங்கள் அப்படித்தானே இருக்கின்றன. இதற்கு இன்னுமோர் உதாரணம் சொல்கிறேன். கடந்த 2021 ஆம் ஆண்டு வீடடைவு காலத்தில் எல்லா வழிபாட்டுத் தலங்களையும் அரசு மூடச் சொல்லியிருந்தது.
அன்று எனது பிறந்தநாள் என்பதால், ‘கோயில் திறக்கலன்னா என்ன… போயி வெளியிலயாவது கொஞ்சநேரம் நின்னுட்டு வருவோம்’ என்று நாங்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் இருந்த பழமையான சிவன் கோயில் ஒன்றுக்குப் போயிருந்தேன்.
அங்கே ஒரு குடும்பத்தினரை மட்டும் சிறு கதவு வழியாக கோயில் அர்ச்சகர் உள்ளே அழைத்துப் போனார். பின்னாலேயே நானும் சென்றதற்கு என்னை மட்டும் தடுத்து நிறுத்தி, ‘லாக்டவுன் கோயிலுக்குள்ள யாரும் வரக்கூடாது’ என்றார். ‘இதோ, இவங்களாம் போறாங்களே?’ என்றேன். எதுவும் சொல்லாமல் முறைத்தார். சரி, என்று அங்கிருந்து நடந்துவந்து அருகில் இருந்த தேநீர்க் கடை முன்னால் உட்கார்ந்து, அங்கிருந்த பெரியவரிடம் வருத்தத்துடன் நடந்ததைச் சொன்னேன். கேட்டுவிட்டு சிரித்தவர், ‘100 ரூபா தந்திருந்தீங்கன்னா… உங்களையும் விட்டிருப்பாரே, தம்பி’ என்றார்.
இப்படி அரசாங்கத்தின் கடுமையான சட்டங்களே பணத்தால் மிக எளிதாய் மீறப்படும்போது, மனிதர்கள் உருவாக்கின சட்டங்களும், விதிகளும் எம்மாத்திரம்?
[இன்னும்]
*