சொல்லன்றி எதுவுமற்றவன்! – 232

பிற மதத்தவர் வரக்கூடாது என்பது ஒருவகையில் ஏற்புடையதாகவும் இருக்கிறதே?

(என் கேள்வியால் சட்டென்று கோபமுற்றவர்)

அந்த சிவபெருமானே வேற்று மதத்தில் இருந்த திருநாவுக்கரசரை ஆட்கொண்டு சைவத்திற்கு மாற்றியவர்தானே!

மனிதர்களை முதலில் மனிதர்களாகப் பார்க்கவேண்டும். பிறகுதான் மற்றவை எல்லாம். எந்தக் கடவுளும் வந்து இதுபோன்ற இழிச்செயலை செய்யச் சொல்லவில்லை. எல்லாம் மனிதர்கள் தம் விருப்பத்துக்கு ஏற்ப செய்தது.

முதலில் நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். கோயில் என்பது இறைவன் உறையும் இடம் மட்டுமல்ல. அது கலை, பண்பாட்டு, கலாச்சாரத்துக்கான வெளி. அங்கேதான் எல்லா கலைகளும் வளர்ந்தது. அப்படிப்பட்ட இடத்திற்கு பிற மதத்தினர் வரக்கூடாது எனச் சொல்வது ஏற்புடையதல்ல.

வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். கோயிலுக்குள் இந்த உடையில்தான் வரவேண்டும். இதையெல்லாம் பின்பற்ற வேண்டும். அதை விட்டுவிட்டு மொத்தமாக வரவே கூடாது என்பது சரியல்ல.

இங்கே இன்னொரு முக்கியமான விஷயத்தையும் சொல்லவேண்டும். இதுபோன்ற பதாகையை வைத்திருக்கும் கோயில்களில் ஒரு நூறு ரூபாயோ, இருநூறு ரூபாயோ தந்துவிட்டால் போதும், அவர்களுக்கு இந்து அல்லாதவர்கள் ஒரு பொருட்டே அல்ல. உடனே பல்லைக் காட்டிக்கொண்டு உள்ளே விட்டுவிடுவார்கள். நானே பார்த்திருக்கிறேன். இதையெல்லாம் எங்கே போய் சொல்வது?

[இன்னும்]

*

சொல்லன்றி எதுவுமற்றவன்! – 231

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=