சொல்லன்றி எதுவுமற்றவன்! – 231

இன்றைக்கு மதுரை உள்ளிட்ட பல கோயில்களில்இந்து அல்லாதவர்கள் உள்ளே வர அனுமதி இல்லை’ என்று பதாகை வைத்திருக்கிறார்களே?

ஆமாம். காணுந்தோறும் எரிச்சலை உண்டாக்கக்கூடிய இழிச்செயல் அது. உலகில் வேறு எந்த மதத்திலும் இதுபோல் கீழ்த்தரமான செயலில் ஈடுபடுவார்களா தெரியாது. நான் அறிந்தவரையில் எந்த கிறித்தவ தேவாலயத்திலும், இஸ்லாமிய தர்காவிலும்; மசூதியிலும், புத்த விகாரத்திலும் இப்படி ஒரு பதாகை வைத்து பார்த்ததில்லை.

உண்மையில் பிற மதத்தினர் இன்னொரு மத வழிபாட்டு தலங்களுக்கு வருவதை மனத்தார வரவேற்க வேண்டும். ஆனால், இதுவோ மதவெறியை மட்டுமே காட்டுகிறது. எனக்குத் தெரிந்த இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியை ஒருவர், தேவாரத்தின் மீது மிகுந்த பற்று கொண்டவர். அதிலும் திருநாவுக்கரசரை தனது குருவாக எண்ணுபவர். தன் குரு சிவனை வழிபட்ட ஒரு கோயிலுக்குக் கூட சென்று அவர் பாடின பாடலை சிவபெருமான் முன்னால் நின்று பாட முடியவில்லையே என்று ஒருதடவை வருத்தத்துடன் சொன்னார். கேட்கும்போது சங்கடமாக இருந்தது.

திருநாவுக்கரசர் யார் என்றே தெரியாத இந்துக்கள் கோயிலுக்குள் வந்து சிவனை வணங்கலாம். ஆனால், திருநாவுக்கரசரை தனது குருவாகக் கொண்ட பிற மதத்தவர் வந்து வணங்கக் கூடாது. இது எந்த விதத்தில் நியாயம்? இதுபோன்ற பல கீழ்மைகள் இங்கே நிறைந்து கிடக்கின்றன. அதையெல்லாம் முதலில் களையவேண்டும்.

[இன்னும்]

*

சொல்லன்றி எதுவுமற்றவன்! – 230

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=