சொல்லன்றி எதுவுமற்றவன்! – 230

இங்கே சிதம்பரம் கோயில் குறித்த ஒரு கேள்வி. தமிழகத்தில் உள்ள கிட்டத்தட்ட எல்லா கோயில்களும் இன்றைக்கு தமிழக அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. சிதம்பரம் கோயில் மட்டும் இன்னும் தீக்‌ஷிதர்கள் கையில் இருக்கிறது. இதை ஓர் எழுத்தாளராக எப்படி பார்க்கிறீர்கள்?

என் பொருத்தவரையில் அவர்கள் கையில் இருப்பதே சரி. கண்ணால் பல தடவை கண்டிருக்கிறேன். அத்தனை ஈடுபாட்டோடு ஒவ்வொரு திருவிழாவையும் சேர்ந்துக் கொண்டாடி மகிழ்ந்து நடத்துவார்கள். இதுவே அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா தெரியாது.

அறநிலையத்துறை பெரும்பாலும் தகுதியற்றவர்களை பணியில் அமர்த்தி பல கோயில்களை நாசம் செய்து வருவதை நானே பார்த்திருக்கிறேன். முக்கால்வாசி அறநிலையத்துறை அதிகாரிகள், ‘அலுவலகம் கோயிலுக்குள் இருக்கிறதே, அங்கே செருப்பு அணிந்து செல்லக்கூடாது’ என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல் அவர்கள் பாட்டுக்கு காலணி அணிந்துகொண்டு போகிறார்கள்.

அவர்களது நோக்கம் எல்லாம் கோயில் எங்கும் உண்டியல் வைப்பது, தனித்தனி வரிசைகள் உருவாக்கி எப்படியெல்லாம் கோயிலுக்கு வரும் பக்தர்களிடமிருந்து பணம் வசூலிப்பது என்பதிலேயே இருக்கிறது. இப்படிப்பட்டவர்களிடம் போய் கோயிலுக்கான மரியாதையையும், அடுத்தகட்ட வளர்ச்சியையும் எங்கே எதிர்பார்ப்பது?

ஆகையால் புகழ்பெற்ற சிதம்பரம் கோயிலை தம் வீடாகவும், அங்கே நடனம் ஆடிக்கொண்டிருக்கும் நடராஜரை தம்மில் ஒருவராகவும்; தம் தலைவனாகவும் எண்ணி வணங்கும் தீக்ஷிதர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதே சரி என்று சொல்வேன்.

[இன்னும்]

*

சொல்லன்றி எதுவுமற்றவன்! – 229

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=