சொல்லன்றி எதுவுமற்றவன்! – 229
அப்போ, நீங்கள் ‘சிதம்பர நடராஜப் பிரியர்’ என்று சொல்லுங்கள்…
ஆமாம். ஒவ்வொரு தடவை சிதம்பரம் நடராஜரை போய் பார்க்கும்போதும் என்னை அறியாமல் கண் கலங்கி விடுவேன். ஏன், எதற்கு என்றெல்லாம் தெரியாது. அந்த வடிவமும், அது தரும் அதிர்வும், அச்சூழலும் என்னை சட்டென நெகிழச் செய்துவிடும். பார்க்கப் பார்க்கத் திகட்டாத வடிவம் அது.
ஒவ்வொரு தடவை கோயிலுக்குப் போகும்போதும் இன்னொரு தடவை, இன்னொரு தடவை என்று சொல்லிக்கொண்டு போய் குறைந்தது இருபது, முப்பது தடவையாவது பார்த்துவிடுவேன். அந்த அளவுக்கு சிதம்பரம் நடராஜரை பிடிக்கும்.
திருவிழா நாட்களில் எட்டித் தொடும் தூரத்தில் நின்று பார்த்திருக்கிறேன். அது தவிர தமிழகத்தில் உள்ள கோயில்களில் குறைந்தது இருநூறு நடராஜரையாவது பார்த்திருப்பேன். எந்த நடராஜரும் சிதம்பரம் நடராஜர் அளவுக்கு என்னை ஈர்க்கவில்லை.
[இன்னும்]
*