சொல்லின்றி எதுவுமற்றவன்! – 214

வலைதளம் என்பது ஒருவகையில் நம் படைப்பை இலவசமாகத் தருவது. இதனால் ஓர் எழுத்தாளரின் புத்தக விற்பனை பாதிக்காதா?

நிச்சயம் பாதிக்காது. ஏனென்றால் இணையம் வேறு, அச்சு வேறு. இரண்டிற்குமான வாசகர்கள் இருக்கிறார்கள். இணையம் ஒருவகையில் அச்சு நூல்கள் நோக்கியும், அச்சு நூல்கள் இணையம் நோக்கியும் வாசகர்களை கொண்டு செல்லக்கூடியவை. அவ்வகையில் பார்த்தால் இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை; உதவியானவை.

இதை இன்னும் இப்படிச் சொல்லலாம். ஒரு கட்டுரையையோ, கதையையோ உடனே பொதுவில் கொடுக்க நினைத்தால் வலைதளத்தில் அந்நிமிடமே பதிவேற்றிவிடலாம். அதை வாசிப்பவர்கள் நம் மற்ற படைப்புகள் நோக்கி வர அது வழிவகுக்கக்கூடும். அதேநேரம், அந்த எழுத்து நாளை அச்சில் வரும்போது அதை வாங்கிப் படிக்கவும் செய்வார்கள். இதில் இலவசம், பணம் என்பதெல்லாம் எழுத்தாளனை பொருத்தவரையில் இரண்டாம் பட்சம்தான். அவன் எழுத்து வாசகர்களை தடையின்றி சென்று சேர்வதும், வாசிக்கப்படுவதும்தான் முதல்பட்சம்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 213

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=