சொல்லின்றி எதுவுமற்றவன்! – 197
நீங்கள் பத்திரிகையில் எழுதும் முதல் இலக்கியத் தொடரல்லவா இது?
ஆமாம். அதுவும் மிக முக்கியமானத் தொடர். ஒவ்வோர் அத்தியாயத்துக்கும் அவ்வளவு மெனக்கெட்டு வருகிறேன். சொல்லப் போனால் எழுதும் எனக்கு பெருமகிழ்வை தரும் தொடர். வாசித்த பலரும் கொண்டாடி வருகிறார்கள்.
இதழின் ஆசிரியர், முத்துக்கள் பற்றி நான் எழுதியிருந்த இரண்டாவது அத்தியாயத்தை வாசித்துவிட்டு, ‘ரொம்ப ரொம்ப நல்லா எழுதுறீங்க. எப்படி இப்படியெல்லாம் எழுத முடியுதோன்னு ஆச்சரியமா இருக்கு. ஒவ்வொரு கட்டுரைக்கும் எவ்வளவு மெனக்கிடல். அதை வாசிக்கும்போது நல்லாவே உணர முடியுது. தொடர்ந்து எழுதுங்க. வாழ்த்துக்கள்’ என்றார்.
மூத்த எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் ஓர் அத்தியாயத்தை வாசித்துவிட்டு, ‘அருமையான கட்டுரை. வாசிக்கத் தந்தமைக்கு நன்றி. வாழ்க!’ என்றிருந்தார்.
பத்திரிகையில் எழுதும் முதல் இலக்கியத் தொடர் எல்லோருக்கும் இவ்வாறு வாய்க்காது என்றே நினைக்கிறேன்.
[இன்னும்]
*