சொல்லின்றி எதுவுமற்றவன்! – 195

மரங்கள் பற்றிய சிறுவர்களுக்கான பாடல் தொகுப்பு. கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. எப்போது வெளியிடுவதாக திட்டம்?

தெரியவில்லை.

(சொல்லிவிட்டு எதையோ தனக்குள் யோசித்தவராய் சில நொடிகள் மவுனமாக இருந்தவர்)

வெறும் பாடல் தொகுப்பாக வெளியிடுவதாக இருந்திருந்தால் எழுதிய உடனே வெளியிட்டிருக்கலாம். அந்தந்த மரங்களுக்கான ஒளிப்படங்களோடு, ஒவ்வொரு பாடலுக்கும் அம்மரத்துக்கு ஏற்றாற் போன்று இசையமைத்து, குழந்தைகளை பாடவைத்து, கியூ.ஆர். கோடோடு வெளியிடலாம் என்று எண்ணியதால்தான் தாமதம் ஆகிறது.

இங்கே எதுஎதற்கோ பணத்தை வாரி இரைப்பவர்கள் இதுபோன்ற வருங்கால தலைமுறையினருக்குப் பயன்படப்போகும் படைப்புகளுக்கு உதவவும், தயாரிக்கவும் முன்வருவதில்லை. இதையெல்லாம் கடந்தே நூலைக் கொண்டுவர வேண்டியுள்ளது.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 194

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=