சொல்லின்றி எதுவுமற்றவன்! – 188
இந்நூல் எழுதுவதற்கு முன்னால் பல பயண நூல்கள் வாசித்திருப்பீர்கள். அவற்றில் சட்டென இப்போது உங்கள் நினைவுக்கு வரும் ஒரு நூலைப் பற்றி சொல்லமுடியுமா?
வெ. சாமிநாத சர்மா எழுதிய ‘எனது பர்மா வழிநடைப் பயணம்’ என்னை பெரிதும் பாதித்த; ஈர்த்த பயண நூல். ஒருநாள் தற்செயலாக அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கண்ணில் பட்டது. ஏற்கனவே அந்நூல் குறித்து கேள்விப்பட்டிருந்ததால் உடனே எடுத்து வாசிக்கத் தொடங்கினேன்.
போர் சமயத்தில் தான் பர்மாவிலிருந்து புறப்பட்டு இந்தியா வந்ததை அத்தனைத் தத்ரூபமாக எழுதி இருந்தார். சில இடங்கள் வாசிக்கையில் என்னை அறியாமல் கண்கலங்க வைத்தது. நான் வாசித்த பயண நூல்களில் மிக அற்புதமான ஒரு நூல்.
இன்னும் சில நூல்களை இதுபோல சொல்லமுடியும் என்றாலும், அவற்றில் அண்மையில் வாசித்து வியந்த இன்னொரு முக்கியமான நூல் சாரு நிவேதிதா எழுதிய ‘நிலவு தேயாத தேசம்’. ஒரு பயண நூல் என்பதைத் தாண்டி பெரும் தகவல்கள் அடங்கிய புத்தகமாக இருந்ததைக் கண்டு வியந்தேன். நேரில் பார்க்கும்போது அவரிடமே இதைச் சொன்னேன். பெரிதும் மகிழ்ந்தார்.
[இன்னும்]
*