சொல்லின்றி எதுவுமற்றவன்! – 181
தென்பெண்ணை ஆறு பற்றி தொடர்ந்து பதிவு செய்து வருகிறீர்கள். இந்நாவலிலும் அது தொடர்கிறது. நான் அறிந்தவரை உங்கள் அளவுக்கு தென்பெண்ணையை பதிவு செய்துவரும் இன்னொருவர் இல்லை. இந்த அளவுக்கு எழுத என்ன காரணம்?
நினைவு தெரியாத நாளிலேயே தென்பெண்ணையில் குளித்திருக்கிறேன். அதன் நீரை குடித்திருக்கிறேன். அதிலே விளையாடி பல உயரிய பாடங்களை கற்றிருக்கிறேன். நீச்சல் பழகி இருக்கிறேன். மீன்பிடித்து சுட்டுத் தின்றிருக்கிறேன். அதனைக் கடந்துசென்றே பள்ளிப் பாடங்களை படித்திருக்கிறேன். இப்படிப்பட்ட ஆறு பற்றி எழுதாமல் இருந்தால்தான் ஆச்சரியமே!
(சொல்லிவிட்டு மென் சத்தத்தில் சிரித்தவர்)
ஒரு ரகசியத்தை இங்கே உங்களிடம் சொல்கிறேன். தென்பெண்ணை ஆறு பற்றி மட்டுமே தனியாக ஒரு நூல் எழுதிவருகிறேன். இதுவரை ஆறு பற்றி இப்படியொரு நூல் வந்ததில்லை என்னும் அளவுக்கு கூறு முறை தொடங்கி, பல முதல்களை அதில் செய்துவருகிறேன்.
[இன்னும்]
*