சொல்லின்றி எதுவுமற்றவன்! – 165
கேட்கும்போதே அத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது. இதெல்லாம் நடந்திருந்தால் இன்னும் எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப் பார்க்கிறேன். சரி, ‘எங்க கல்யாணம்’ நூல் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகப் போகின்றன. இந்நூலை வாசித்தவர்கள் இதுவரை சொன்னவற்றில் ஒன்றிரண்டை இங்கே சொல்லமுடியுமா?
ம்… சொல்கிறேன்.
எனது ஆசிரியர்களில் ஒருவரான மூத்த எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள், சென்றாண்டு அவர் வீட்டுக்குப் போயிருந்தபோது, ‘என்னென்ன சொல்ல வேண்டுமோ, அதையெல்லாம் சரியா சொல்லி இருக்கீங்க. நூல் நல்லா வந்திருக்கு. நண்பர்கள்கிட்ட படிக்க சொல்லி தந்திருக்கிறேன்’ என்றார்.
இன்னொரு வாசகியான முனைவர் பட்ட மாணவி ஒருவர், ‘படிச்சி முடிச்சதும் ஒண்ணு மட்டும் தான் தோணுச்சு… வாழ்ந்தா <3’ என்றிருந்தார். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் நூலினைக் கொண்டாடி வருகிறார்கள்.
[இன்னும்]
*