சொல்லின்றி எதுவுமற்றவன்! – 159
நூலின் முன்னுரையில் ‘Photo Album’ போல இது ‘Word Album’ என்று குறிப்பிட்டு இருப்பீர்கள். நூல் முழுவதும் வாசித்து முடித்ததும் அது உண்மையென்று பட்டது. உங்கள் வாழ்க்கையில் திருவள்ளுவருக்கு இவ்வளவு முக்கியத்துவம் தர என்ன காரணம்?
(நொடியும் தாமதிக்காமல்) திருவள்ளுவர் என்பவர், என்றோ இப்பூமியில் பிறந்து வாழ்ந்து மறைந்த ஒருவர் அல்ல என்றே நினைக்கிறேன். சொல்லப்போனால், அன்றும் இன்றும் ஏன், என்றும் இருந்தவர்; இருப்பவர் என்று தோன்றும்.
ஒரு மனிதனின் நல்வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் சொன்னவர். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற உன்னதப் பாடத்தை மானுட சமூகம் நோக்கி உரைத்தவர். ‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்’ என்று சீற்றம் கொண்டவர். ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்’ என்னும் உயரிய நெறியை போதித்தவர். என் வாழ்வில் பல முக்கியமான தருணங்களில் எனக்கு வழிகாட்டியாக இருந்தவர்; இருப்பவர். அதனால்தான் அவரை சாட்சியாக வைத்து எங்கள் திருமணத்தை நடத்தினோம்.
[இன்னும்]
*