சொல்லின்றி எதுவுமற்றவன்! – 155

அதேபோல நீங்கள் சொடுக்கிய ஒளிப்படங்களில் (இதில் உள்ளவற்றில்) ஒன்றை சொல்லமுடியுமா?

நூலின் பின்னட்டையில் இருக்கும் எனது சுயமி ஒளிப்படம்.

ஒருநாள் சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் இருக்கும் தக்க்ஷின்சித்ராவுக்குப் போயிருந்தேன். தற்செயலாக அங்கிருந்த கண்ணாடி அறைக்குள் நுழைந்ததும், சுற்றிலும் தெரிந்த என் உருக்களைக் கண்டு மகிழ்ச்சியில் நகர்பேசியை எடுத்து, ஒருவரும் அதற்குமுன் எடுக்காத மாதிரி ஓர் ஒளிப்படம் எடுக்க நினைத்து, மேலிருந்த கண்ணாடி நோக்கிப் பார்த்தபடி, கீழிருந்து மேல் இருக்கும் ஆடியில் பிரதிபலிக்கும் எனது உருவத்தை சுயமியாக சொடுக்கினேன். அது அத்தனை அழகாகப் பதிவானது.

மொத்தம் ஆறு இடங்களில் வெவ்வேறு வகையில் என்னுருவம் பதிவாகி இருக்கும். எப்போது நினைத்தாலும் நான் சொடுக்கியவற்றில் வியத்தும் ஒளிப்படம் இது.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 154

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=