சொல்லின்றி எதுவுமற்றவன்! – 141
நல்லவேளை அவர்களுக்காக காத்திருக்காமல் எழுதி முடித்து நூலாகக் கொண்டு வந்தீர்கள். இல்லையென்றால், ‘நிலைத்திணை’ இன்னும் எழுதப்படாமலேயே இருந்திருக்கும்.
ஆமாம். எழுத்தாளர் நாஞ்சில் நாடன் ஐயா ஒருநாள் பேசும்போது என்னிடம் சொன்னார். ‘ஒரு படைப்பை பலர் கொண்டாடுவதாலோ, பேசுவதாலோ மட்டும் உயர்ந்தது ஆகிவிடாது. அதேபோல ஒரு படைப்பை யாரும் பேசவில்லை, கொண்டாடவில்லை என்பதற்காக தாழ்ந்ததும் ஆகிவிடாது. எதையும் காலம்தான் முடிவு செய்யும். அதனால் எதைப் பற்றியும் நினைக்காமல், தொடர்ந்து எழுதிக்கிட்டே இருங்க. ஒரு படைப்பு அதற்கான இடத்தை நிச்சயம் அடைந்தே தீரும்.’
இதைத்தான் எப்போதும் நினைத்துக்கொள்வேன். அவர்கள் நிராகரித்ததை ஒரு பொருட்டாக எண்ணி சோர்ந்துபோகாமல், இன்னும் இன்னும் உற்சாகமாக என் படைப்பு மீது கொண்ட நம்பிக்கையில் எழுதி உடனே நூலாகக் கொண்டுவந்தேன். பெரும் எண்ணிக்கையில் வாசிக்கப்படவில்லை என்றாலும், வாசித்தவர்கள் எல்லோரும் கொண்டாடி வருகிறார்கள். அது போதும்.
[இன்னும்]
*