சொல்லின்றி எதுவுமற்றவன்! – 137

இந்நூல் எழுதக் காரணமானவர் என்பதால்தான் எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கு இந்த நூலை சமர்ப்பித்தீர்களா?

ஆமாம்.

(சிறிது இடைநிறுத்தி) ஆனால், அது மட்டும் காரணம் அல்ல. அவர் என் ஆசிரியர்களில் ஒருவர். நான் பெரிதும் மதிப்பவர். அவரது எல்லா நூல்களையும் தேடித் தேடி வாசித்திருக்கிறேன். பின்னாளில் தேடிச் சென்று நேரில் சந்தித்தும் பேசியிருக்கிறேன். எனது முதல் நூலுக்கு அவரிடம் முன்னுரை பெற்றவன். என் தந்தை இடத்தில் அவரை வைத்துப் பார்ப்பவன். ஒருவேளை இந்நூலும், இக்காரணமும் இல்லை என்றாலும், வேறு ஏதாவது முக்கியமான ஒரு நூலை பின்னாளில் எழுதி நிச்சயம் அதை அவருக்கு சமர்ப்பணம் செய்திருப்பேன்.

ஒரு மாணவனாக எனது ஆசிரியருக்கு நான் சமர்ப்பணம் செய்த மிக எளிய நூல் இது. அவ்வளவே.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 136

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=