சொல்லின்றி எதுவுமற்றவன்! – 126

இதற்கு அப்படியே நேர்எதிராககானகா’ பாடலை, நீங்கள் படித்த கணிப்பொறி அறிவியலில் வரக்கூடிய ‘Palindrome’ முறையில் எழுதி இருப்பீர்களே?

ஆமாம். இதுவரை யாருக்கும் சொல்லாத ஓர் உண்மையை இப்போது உங்களிடம் சொல்கிறேன். கணிப்பொறி அறிவியலை யார் வற்புறுத்தலும் இல்லாமல் மிகமிக விரும்பிப் படித்தவன் நான். அதிலும் அவற்றில் வரக்கூடிய C, C++, Java, PHP உள்ளிட்ட எல்லா ப்ரோக்ராமிங் லாங்குவேஜ்களிலும் அத்தனை ஆர்வத்தோடு ப்ரோக்ராம்கள் எழுதிப் பழகியவன். அனைத்து செய்முறை தேர்வுகளிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவன். என்றபோதும், அவற்றோடு ஓர் அந்நியம் அதுவும், எம் மண்ணுக்கும் மனத்துக்கும் இருப்பதை உணர்ந்ததால் அவற்றிடமிருந்து என்னை விலக்கிக் கொண்டுவந்து விட்டேன்.

மண்ணுக்கும் மனத்துக்கும் அந்நியம் என்றேனே, அது துளியும் எழுத்திலும் இலக்கியத்திலும் இல்லாததை எதிர்பாராத ஒரு தருணத்தில் கண்டுகொண்டேன். உடனே இதுதான் நாம் செல்லவேண்டிய பாதை என்று புரிந்தது.

எனினும், நான் படித்த கணிப்பொறி அறிவியல் படிப்பு அவ்வப்போது எனக்குள் இருந்து எட்டிப் பார்ப்பதை தவிர்க்க முடிவதில்லை. அவ்வாறு கடந்த 2015 ஆம் ஆண்டு எட்டிப் பார்த்த நேரத்தில்தான் இந்த ‘கனகா’ பாடலை ‘Palindrome’ முறையில் எழுதினேன். ஏனோ, அதை அப்போது இசையமைத்து வெளியிட முடியாமல் போனதால், அடுத்த சில ஆண்டுகளில் இன்னொரு பாடலாசிரியர் அதே முறையில் வேறொரு பாடலை எழுதி, ‘தமிழின் முதல் ‘Palindrome’  பாடல்’ என்று வெளியிட்டு விட்டார்.

வருத்தமாக இருந்தாலும், என் பாடல் அளவுக்கு அவை இல்லை என்று தோன்றியதால், அதை இத்தொகுதியில் சேர்த்து வெளியிட்டு விட்டேன்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 125

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=