சொல்லின்றி எதுவுமற்றவன்! – 080

‘ஐயா’ நூலுக்கு வந்த ஓர் எதிர்மறை விமர்சனம்?

இதுவரைக்கும் அப்படி எதுவும் வரவில்லை. இனிமேல் வந்தாலும் மகிழவே செய்வேன். எனினும், இந்நூலால் சிலர் என்னை தம் எதிரியாக நினைத்துக்கொண்டார்கள் என்று மட்டும் உறுதியாக தெரிந்துகொள்ள முடிந்தது.

வேண்டுமானால் உங்கள் கேள்வியை சற்று மாற்றி, ஐயா நூலால் நிகழ்ந்த ஓர் எதிர்மறை சம்பவம்?’ என்று கேட்டால் ஒன்றை சொல்வேன். ஒரு பிரபல தொலைக்காட்சியின் உயர் பொறுப்பில் இருப்பவரை (பத்து நூல்களுக்கு மேல் எழுதியவர்) மரியாதை நிமித்தமாக சந்தித்து, மகிழ்வுடன் ஐயா நூலின் ஒரு பிரதியை அவரிடம் தந்துவிட்டு வெளியில் வந்தேன்.

அவர் அந்த நூலை மருந்துக்குக் கூட புரட்டிப் பார்க்காமல், ‘இவன்லாம் புத்தகம் எழுத வந்துட்டானா? அப்படி என்னத்த பெருசா எழுதி கிழித்திருக்கப் போறான்’ என்னும் தோரணையில், அங்கிருந்த குப்பைத் தொட்டியில் போட்டதை, அவரது அறையை திறந்துகொண்டு ஒருவர் நுழைகையில் தற்செயலாக நான் பார்த்துவிட்டேன்.

பெரிதாக வலித்தது. உடைந்துபோய் கண் கலங்கியபடி அங்கிருந்து வேகமாக கீழே இறங்கி வந்து சாலையோரத்தில் நின்றுகொண்டு, அவர் இருக்கும் கட்டிடத்தை திரும்பிப் பார்த்து எனக்குள் நானே சொல்லிக்கொண்டேன். ‘ஆமா, நான்லாம் புத்தகம் எழுத வந்துட்டன். இதுவரைக்கும் நீங்க எழுதி கிழிக்காதத… ஏன், மத்த எழுத்தாளர்கள் கூட எழுதாதத எழுதப் போறன். ஒண்ணு இல்ல… ரண்டு இல்ல… நூறு புத்தகம் எழுதுவன். அதுக்கு மேலயும் எழுதுவன்’.

‘ஐயா’ நூல் சார்ந்து நிகழ்ந்த ஒரே எதிர்மறை சம்பவமாக இதைத்தான் சொல்வேன்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 079

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=