சொல்லின்றி எதுவுமற்றவன்! – 079
எனினும் குமுதம் – சிநேகிதி, தமிழ் இந்து, தினமணி – கதிர் போன்றவற்றில் ‘ஐயா’ நூல் குறித்த மதிப்புரைகளும், கட்டுரைகளும் வந்திருந்ததே?
ஆமாம். ‘ஐயா’ நூலின் முதல் கட்டுரையை வெளியிட்டதற்கு நன்றி சொல்லும் விதமாக ‘குமுதம் – சிநேகிதி’ இதழின் ஆசிரியரை நேரில் சந்தித்து நூலின் ஒரு பிரதியை தந்துவிட்டு வந்தேன். அவரோ நான் சற்றும் எதிர்பாராத வகையில் அதை வாசித்துவிட்டு கொண்டாடி சிநேகிதி இதழில் மதிப்புரை எழுதியிருந்தார்.
தினமணி – கதிரில் என் நண்பர் ஒருவர் என்னைப் பற்றியும், ஐயா நூல் பற்றியும் சொன்னதை கேள்விப்பட்டு அவர்களாக அழைத்துப் பேசி ஒரு கட்டுரை எழுதினார்கள். தமிழ் இந்துவில் பதிப்பாளர் ‘விஜயா’ வேலாயுதம் ஐயா கேட்டதன் பேரில் சிறு மதிப்புரை ஒன்று எழுதியிருந்தார்கள். அவ்வளவுதான்.
[இன்னும்]
*