சொல்லின்றி எதுவுமற்றவன்! – 044

உங்கள் தனிப்பாடல்களில் கிட்டத்தட்ட எல்லாமே தனித்துவமானது என்றாலும், அவற்றில்பெண்மீகம்எப்போதும் என்னை வியப்பில் ஆழ்த்துவது. இப்படியொரு பாடல் உருவாக்கவேண்டும் என்ற எண்ணம் எங்கிருந்து வந்தது?

முதலில் இந்தப் பாடலுக்கான கருவை இயக்குனர் துருவன் ராஜபாண்டி அவர்கள் என்னிடம் சொன்னதும் மிகவும் பிடித்துவிட்டது. அதென்ன பெண்கள் தினம் என்றாலே எப்போதும் சுனிதா வில்லியம்ஸ், அன்னை தெரசா, இந்திரா காந்தி, சானியா மிர்சா போன்ற பெரும் சாதனைப் பெண்களை மட்டுமே கொண்டாடுவது? அவர்களைப் பற்றி மட்டுமே பேசுவது? ஏன் நம்மைச் சுற்றி இருக்கும் நம் அம்மாக்கள் தொடங்கி… நமக்காக அன்றாடம் வேலை செய்யும் துப்புறவு தொழிலாளப் பெண்கள் வரைக்குமான எளிய விளிம்பு நிலைப் பெண்களை கண்டுகொள்வதில்லை? இந்தப் பாடலில் நாம் இவர்களைப் பற்றி மட்டுமே பேசுவோம். இவர்களையே கொண்டாடுவோம் என முடிவெடுத்து உருவாக்கியதுதான் இந்த ‘பெண்மீகம்’ பாடல்.

விளிம்பு நிலைப் பெண்களின் வாழ்வையும், அவர்களது தியாகத்தையும், பெருமையையும், வலிமையையும் முடிந்தவரைக்கும் இந்தப் பாடலில் சொல்ல முற்பட்டேன். என்னைப் போலவே என் இசையமைப்பாளரும், இயக்குனரும் அவர்களது பணியை மிகச் சிறப்பாகவே செய்திருப்பார்கள்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 043

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=