சிக்கு தீர்த்தல்

கணவன் மனைவிக்கு இடையே (ஒத்துவராத பட்சத்தில்) ஊர் பஞ்சாயத்து மூலமாக ‘இருவருக்கும் இனி எவ்வித ஒட்டுஉறவும் இல்லை’ எனப் பேசி தீர்த்துவைப்பது.
[அதாவது, இன்றைய நீதிமன்ற விவாகரத்து போல.]
[சிக்கு தீர்த்தல் = சிக்கு தீத்தல்]
– நல்லாருப்பன்னு நெனச்சிதான் கட்டிவச்சன்… இப்டி சிக்குதீத்துனு வந்து நிப்பன்னு, யாரு கண்டது.
– ஒன் அக்காக்காரி சிக்குதீத்து… வர்ற வையாசியோட ரண்டுவருசம் ஆவப்போவுது, பாவம்.
*