மூக்கரக்காற்று

மண்ணையும் சருகையும் வாரி இறைத்தபடி சுழன்றடிக்கும் சுழல் காற்று.
[இது ‘பேய்காத்து’ என்றும், இதில் பேய் வரும் என்றும், இதை பேய் அனுப்பி வைக்கும் என்றும் சொல்வர்.]
[மூக்கரக்காற்று = மூக்கரக்காத்து = மூக்கிரக்காத்து = பேய்காத்து]
– என் ஆயுளல, இப்டி ஒரு மூக்கரக்காத்த இதுவரைக்கும் நான் கண்டதில்ல…
– இப்பதான் களத்த நல்லா கூட்டிவுட்டுப் போனன்… அதுக்குள்ள மூக்கரக்காத்து குப்ப அள்ளியாந்து கொட்டிடுச்சு.
*