சேந்துகிணறு

(வட்டவடிவ கருங்கல் சுவர்களால் ஆன) இறைகிணறு.
[கயிறு கட்டி தோண்டி மூலம் தண்ணீர் சேந்தி எடுப்பதால் இப்பெயர் வந்ததாக சொல்வர்.]
[சேந்துகிணறு = சேந்திகிணறு = சேந்தகிணறு]
– இப்டி ஒக்காந்துனு கீற நேரத்துல… சேந்துகெணத்துல போயி ரண்டு கொடம் தண்ணி எடுத்தாந்தா ஒன்னும் கொறஞ்சிட மாட்டீங்க…
– சேந்துகெணத்துக்கு போனவள இன்னும் காணாம்… போயி என்னான்னு செத்த எட்டிப்பாரு, தாயி.
*