மிலாறு

மரத்தில் கிளைத்திருக்கும் ஒழுங்கற்ற சிறு கிளை.
[செடிகளைச் சுற்றி நட்டுவைத்து வேலி அமைக்கவும், அவரை பீர்க்கன் பாகல் போன்றவற்றின் அருகில் நட்டு (கொடி) ஏற்றவும் பயன்படுவது. காய்ந்த மிலார் படல் கட்டவும், நெல் அவிக்கவும், அடுப்பெரிக்கவும் பயன்படுவது.]
[மிலாறு = மெலாறு = மிலார் = மெலார்]
– காட்டுப் பக்கம் போனன்னா நாலு மெலாறு வெட்டியாந்து அவரக்கொடிக்கிட்ட நட்டு வைய்யி.
– மன்மதன் கொலுத்த தொவர மெலாறு வேணும், எங்கனா இருந்தா போயி எடுத்தாங்க.
*