தப்புக்காய்

மரத்தில் காய்கள் பறிக்கும்போது கண்ணுக்குப்படாமல் (இலைகளின் மறைவில்) தப்பித்துவிடும் காய்கள்.

[தப்புக்காய் = தப்புங்காய் = தப்பங்காய்]

– மரத்துல கீற தப்புக்காய பறிக்காம அப்டியே வுட்டுடு, காக்கா குருவிங்க தின்னட்டும் பாவம்.

– பருவாரம் கூட கூடினு தப்புக்காய் பறிக்கப்போனவன், இன்னும் வூடு வந்து சேரல…

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=