போடுமுட்ட

யாருக்கும் அடங்காமல், யார் பேச்சையும் கேட்காமல், எந்த வேலையும் செய்யாமல் வெறுமே ஊர் சுற்றித்திரியும் சிறுவர் மற்றும் இளைஞர்.
[போடுமுட்ட = போடுமூட்ட = போடும்ட]
– கண்ட போடுமுட்டிங்க கூட கூடினு வம்புசண்ட வாங்கியாராதன்னு சொன்னா கேக்கமாட்டல்ல…
– அந்த போடுமூட்ட கூட சேந்தா உருப்பட மாட்டன்னு நான் அன்னிக்கே சொன்னன், கேட்டியா நீ…
*