பந்தம் சுற்றுதல்

தென்னம் பஞ்சை கம்பி அல்லது குச்சியில் கோத்து அதன் மறுமுனையில் வேண்டிய நீளத்துக்கு கயிறு கட்டி, கார்த்திகை தீபத்தன்று நெருப்பு பற்றவைத்து தலைக்குமேலாக வட்டவடிவில் தூக்கிச் சுற்றுவது.
[பந்தம் சுற்றுதல் = பந்தம் சுத்துதல் = பந்தம்]
– எய்யா சாமி, பாத்து ஜாக்ரதயா பந்தம் சுத்துய்யா… மேலகீல நெருப்பு பட்டுடப்போது.
– நாம சின்ன வயசுல சுத்தாத பந்தத்தயா இவனுங்க சுத்திடப்போறாங்க.
*