தக்கை

(மீன் பிடிக்கும் தூண்டிலில் கட்டும்) சிறு மிதக்கும் குச்சி.
[தண்ணீரின் மீது மிதக்கும் இக்குச்சி உள்ளிழுக்கப்பட்டால் மீன் மாட்டிக்கொண்டதாக நினைத்து தூண்டிலை மேலே இழுப்பது வழக்கம்.]
[தக்கை = தக்க]
– போனவாட்டி மீன் புடிக்கறப்பதான் தக்க கட்டுனன், அதுக்குள்ள எங்க வீந்துச்சின்னு தெர்ல.
– தூண்டில்ல தக்க எதுக்கு கட்றாங்கன்னு கூட தெரியாதவன்லாம் மீனு புடிக்க வந்துட்டானுங்க மீனு.
*