காத்துவாரி

(மெத்தை) வீடுகளில் காற்று வருவதற்காக வைக்கும் சிறு சாளரம்.
[திறந்து மூடும் வசதியற்ற, அதேநேரம் குறுக்காக கம்பிகள் வைத்து காற்று வர ஏதுவாக, சிறு கண்ணாடிகள் சாய்வாகப் பொருத்தப்படும் ஒருவகை சாளரம். அதிகமும் குளியலறையிலும், மற்ற அறைகளில் உயரமான இடத்திலும் வைக்கப்படுவது.]
[காத்துவாரி = காத்துவரி]
– ஒண்ணுக்கு ரண்டு காத்துவாரி வச்சும் பொட்டுக் காத்து வரமாட்டுது பாரு.
– மெட்ராஸ் மாரி ஊர்லலாம் காத்துவாரி வக்கவே மேலயும் கீலயும் பாப்பாங்க.
*