போகியம்

குறிப்பிட்ட காலத்திற்கு ஒருவரது நிலத்தை (இன்னொருவர்) குத்தகைக்கு எடுத்துப் பயிரிடுவது.
[சிலர் குறிப்பிட்ட காலத்துக்கு மொத்தமாக இவ்வளவு பணமென்றும், ஒரு சிலர் ஒவ்வொரு விளைச்சலிலும் இன்ன அளவு பங்கென்றும் தருவது வழக்கம்.]
[போகியம் = போவியம்]
– அடுத்தவன் கொல்லிய போகிதுக்கு ஓட்ற அவுனுக்கே இம்மாருந்தா… சொந்தக் கொல்லி ஓட்ற எனுக்கு எம்மாருக்கும்?
– போவியத்துக்கு எதனா கொல்லிருந்தா சொல்லு மாமா, பேசி முடிச்சிரலாம்.
*