ஊம்பல்

பூந்துடைப்பம் குச்சியில் இருக்கும் உதிரும் தன்மைகொண்ட (பயனற்ற சிறு முள் போன்ற) பூக்கள்.

[கரம்புக் காடுகளிலிருந்தும், மலைகளில் இருந்தும் கையால் உடைத்து அல்லது சிறு கத்தியால் அறுத்து வந்து நன்கு வெயிலில் பரப்பப்போட்டு காயவைத்து காய்ந்ததும் கொஞ்ச கொஞ்சமாக எடுத்து சிறு குச்சிகொண்டு தட்டினால் எளிதில் உதிரக் கூடியது. கண்களில் பட்டால் பெரும் இன்னலை விளைவிக்கும் என்பதால் சற்று ஒதுக்கமான இடங்களில் கொண்டுபோய் தட்டி உதிர்ப்பர்.]

[ஊம்பல் = ஊம்புலு]

– ஏன்டி பொண்ண, இந்த ரவ தொடப்பங்குச்சில எம்மாந்நேரமாடி ஊம்பல் அடிப்ப…?

– பாத்து புள்ள… ஊம்பலு கண்ணுல கிண்ணுல பட்டுடப்போது, அப்பறம் பெரிய ரோதனையா போயிடும்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=