தமிழணங்கே…

சித்திரை வெள்ளுவா நன்னாளில் எனது கனவுப் படைப்புகளில் ஒன்றான “தமிழணங்கே”வை இனிதே தொடங்கியிருக்கிறேன்.
‘தமிழ் – தமிழர் – தமிழ்நாடு’ குறித்த கடலளவு சீர்மையை கையளவாக்கித் தரும் அரு;பெருமுயற்சியே இந்நூல்.
நூற்றியிரண்டாம் அகவையை நெருங்கும் எம் ஐயா’வின் ஆசியோடும், இரண்டாம் அகவையில் நற்றமிழ்ப் பயிலும் மகன் ஐ’யின் அருகாமையோடும் இப்பெரும்பணியை தொடங்கியிருப்பதை இங்கே பகிர்வதில் பேருவகையும்; பெருமையும் அடைகிறேன்.
அவள் தாள் வாழ்க! ![]()