தாவர சங்கமம்

வடிவரசு – மொழியின் மீதும், எழுத்தின் மீதும், இயற்கையின் மீதும் தீராத நேசம் கொண்ட இளம் எழுத்துக் கலைஞர். எழுத்தையே வாழ்வாக்கிக் கொண்டவர். அவருடைய தந்தையைப் பற்றிய ஆவணப்பதிவான ஐயா எனும் முதல் நூலை வாசித்த பொழுதிலேயே அவரைக் கண்டுணர்ந்து கொண்டேன்.

அடுத்தடுத்த அவரது படைப்புகள் மிக முக்கியமானவையாக வெளிவந்தன. கொலுசு இதழில் தமிழ் நிலத்தின் தாவரங்களையும் அவை பாடப்பட்டிருந்த சங்க இலக்கியப் பாடல்களையும் இணைத்து மிகச் சிறப்பான ஒரு தொடராக தாவர சங்கமம் வெளிவந்தது. தற்போது அது அழகான நூலாக வெளிவரவிருக்கிறது.

இன்று வடிவரசு அவர்களின் மகன் ‘ஐ’ அவர்கள் பிறந்து 500 வது நாள்.. இந்நன்னாளில் தாவர சங்கமம் தொகுப்பின் அட்டைப் படத்தை வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன் …

இனிய வாழ்த்துக்கள் வடிவரசு …

இந்த நூல் மிகச் சிறப்பான நூல் வாய்ப்பிருக்கும் நண்பர்கள் வாங்கி வாசிக்கவும்.

இரா. பூபாலன்

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=