வர்ணக்கோல்

வட்டவட்டமாக அல்லது சுழல்சுழலாக இருவிரல் அளவுள்ள துரிஞ்சி அல்லது வேப்பம் குச்சியில் தோலுரித்து நெருப்பில் வாட்டி வெள்ளை மற்றும் கருப்பு வண்ணத்தில் செய்யும் ஒருவகை கோல்.
[பொங்கல் தினங்களில் அதிலும் குறிப்பாக மாட்டுப் பொங்கலன்று, இவ்வர்ணக்கோலினை உடன்வைத்துப் பொங்கலிட்டு வணங்குவது வழக்கம். பின் எடுத்துப்போய் வீட்டு எறவானத்திலோ அல்லது ஆடு, மாடு கட்டும் கட்டுத்தெருவிலோ கட்டிவைத்தால் அவ்வாண்டு முழுக்க எவ்வித நோய்நொடியும் இல்லாமல் நலத்தோடும் வளத்தோடும் இருக்கலாம் என்பது மூத்தோர் வழக்கு. சிலர் அழகுக்காக செய்து ஆடு, மாடு ஓட்டிச்செல்லவும், சாட்டிக்கோலாகவும், தூண்டில் கோலாகவும் பயன்படுத்துவதுண்டு.]
[வர்ணக்கோல் = வண்ணக்கோல் = வருணக்கோல்]
– பொங்கலு வருதுனாலே எங்கப்பாரு வர்ணக்கோலு செய்ய ஆரம்பிச்சிருவாங்க.
– அந்தக் காலத்துலலாம் வர்ணக்கோலு இல்லாம ஒருத்தரும் பொங்குலு கும்டமாட்டாங்க.
*