ஐபக்கம் – 049 : தலையணை சுவர்

#மே04,2024

காலை நான்கு மணிக்கு எழுந்த மதி, எங்கள் தூக்கம் தடைபடாமல் மெல்ல வெளியே போய் நடுவீட்டுக்குள் உட்கார்ந்து, குங்குமம் – தோழி இதழுக்கு அனுப்ப கட்டுரை எழுதிக் கொண்டிருந்தாள்.

சரியாக ஆறு மணி இருக்கும். அலாரம் அடித்தது போல எழுந்திட்ட நான், ஐ தூக்கத்தைக் கெடுக்காமல் கொசு வலைக்குள் இருந்து வெளியே வந்து, ‘ஆடூஉ மகடூஉ’ நூலுக்காக ‘பட்டப் பெயர்கள்’ பற்றிய கட்டுரை ஒன்றை எழுதத் தொடங்கினேன்.

திடீரென தூக்கத்தில் கவிழ்ந்திட்ட ஐ, அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருந்தான். உடனே ஓடிப் போய் திருப்பிவிட்டு, மறுபடியும் கவிழாதவாறு ஒரு தலையணையை பக்கத்தில் வைத்துவிட்டு வந்தேன். அடுத்த நிமிடமே மறு பக்கமாகக் கவிழ்ந்திட்டான். இன்னொரு தலையணை வைத்திட்டேன்.

ஓர் அரை மணி நேரம் இருக்கும். ஐ’க்கு பால் கொடுக்க வந்த மதி, ஐ’யைச் சுற்றி நான்கு பக்கமும் தலையணை வைத்திருப்பதை பார்த்துவிட்டு முறைத்தாள்.

மெல்ல உதடசைத்து சிரித்துவிட்டு, நான் பாட்டுக்கு ஒன்றும் தெரியாதவன் போல எழுதத் தொடங்கினேன்.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=