ஐபக்கம் – 048 : அப்பாவின் தாடி

#மே04,2024

ஐ ஒன்றை தவறாமல் எப்போதும் செய்வதுண்டு. நான், மதி யார் தூக்கினாலும் சரி, கீழே விழுந்து விடக்கூடாது என்பதற்காக எங்கள் ஆடைகளை (சிலநேரம், விரலை) பிடித்துக் கொள்வான்.

‘சரி, பயபுள்ள இப்பவே உஷாராதான் இருக்கான்’ என்று நினைப்போம்.

அதன் அடுத்தகட்டமாக உறங்கும்போது, கூடவே பாதுகாப்புக்கு இருக்க வேண்டும் என்று ஆடைகளையும், கைகளையும் (சிலநேரம், மதியின் முடியையும்) பிடித்துக்கொள்ள ஆரம்பித்து, இதோ இன்று, எனது தாடியை பிடித்துக்கொண்டு தூங்கிவிட்டான். ஆம்!

‘சரி, கொஞ்சநேரம் ஆனதும் விடுவித்து எழுந்துவிடலாம்’ என்று பார்த்தால், அத்தனை உறுதியாகப் பற்றிக்கொண்டு உறங்குகிறான்.

அப்படியும் முயற்சித்தால் விடுவித்துவிட்டு எழுந்திருக்கலாம்தான். இருந்தாலும் வேண்டாம் என்று தோன்றியதால், மதியிடம் ஒரு புத்தகத்தை எடுத்துத் தரச் சொல்லி ஐ’யின் தாடிப்பிடியோடு அருகில் படுத்துப் படித்துக் கொண்டிருக்கிறேன்.

இந்த தாடியை வைத்துக்கொண்டு இனி, ஐ’யிடம் என்னென்ன பாடெல்லாம் படப்போகிறேனோ, தெரியவில்லை.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=