உணவூட்டு விழா

ஐ பிறந்து ஆறு மாதம் நிறைவானதையொட்டி…

1. ஐ என்னும் ஒருவனுக்கு,

2. தாய், தந்தையான நாங்கள் இருவரும் சேர்ந்து,

3. மா, பலா, வாழை என்னும் முக்கனிகள் சாட்சியாக,

4. அரசு, வேம்பு, மா, வாழை என்னும் நால்வகைத் தாவரங்கள் துணைகொண்டு,

5. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐம்பூதங்களை வணங்கி,

6. கைப்பு, இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு என்னும் அறுசுவையைப் போற்றி,

7. ஏழு வண்ண காய்கறிகளைக் குறிக்கும் விதமாக ஏழு வண்ணமிட்டு,

8. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்னும் எட்டுத்தொகை நூல்களை வாழ்த்தி,

9. கோதுமை, நெல், துவரை, பச்சைப்பயறு, கொண்டைக்கடலை, அவரை, எள், உழுந்து, கொள் என்னும் நவதானியங்கள் வைத்து,

10. நொறுங்கத் தின்றால் நூறு வயது… முதலான பத்து உணவு சார்ந்த பழமொழிகளைக் கூறி,

மதியின் தந்தை பிறந்த இந்த நன்நாளில் ஐக்கு ‘உணவூட்டு விழா’வை மனத்துக்கு இனிதான வகையில் நிகழ்த்தினதை மகிழ்வோடு பகிர்கிறோம்.

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=