ஐபக்கம் – 036 : 100 நாள் குழந்தையும், 100 வயது குழந்தையும்

#ஏப்ரல்05,2024

இரண்டு : ஐ முதல் தடவையாக நான் பிறந்து வளர்ந்த கிராமத்துக்கு; [முரம்பு] மண்ணுக்கு இன்று வந்திட்டான்.

அதுவும், நூறு வயது குழந்தையான எனது ஐயாவும், நூறு நாள் குழந்தையான மகன் ஐ’யும் சந்திக்கும் இம் மீமிசை தருணத்திற்காக, பல நாட்களாக அலாதியோடு காத்திருந்தேன். ஆம்!

கூடவே, எனை ஈன்ற தாயையும், உடன் பிறந்தவர்களையும், அவர்களது மனைவி மக்களையும் கண்டிட்டான்.

நான் பிறந்து வளர்ந்த இடத்தில்; வீட்டில் இருந்திட்டான்; படுத்திட்டான்; சிரித்திட்டான்; அழுதிட்டான்.

எனை பெற்று வளர்த்து ஆளாக்கிய ஐயா, அம்மாவின் முதிர் விரல்களைத் தொட்டு ஆசி பெற்றிட்டான். அவர்களது உட்சபட்ச உழைப்பு ரேகை படிந்து சுருங்கிய முகத்தை நோக்கிட்டான். மீநிகரற்ற குரலையும்; சொற்களையும் கேட்டிட்டான்; சிரித்திட்டான். ஆம்!

ஐ வாழ்விலும், எனது வாழ்விலும் மிக மிக முக்கிய தினமாக இன்றைய தினத்தை பார்க்கிறேன்; எண்ணுகிறேன். ஆம், ஆம்!

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=