ஐபக்கம் – 035 : வேடிக்கை பார்ப்பவன்

#ஏப்ரல்05,2024
இன்றைய தினம் மிக முக்கிய நாள் என்பதால், ஏற்கனவே மார்ச் 21 ஆம் தேதி எழுதினது போல மூன்று தனித்தனி நாட்குறிப்புகள் எழுத வேண்டியானது.
ஒன்று : ஐ பிறந்து இன்றோடு சரியாக நூறு நாள் ஆகிவிட்டன. ஆகையால், இதற்கு மேலும் தள்ளிப்போட வேண்டாம் என்று, ஊரில் இருக்கும் 100 வயதாகும் ஐயாவிடம் ஐ’யை காட்டுவதற்காக, இன்று காலை கார் வைத்துக்கொண்டு புறப்பட்டோம்.
ஐ வாழ்வில் மேற்கொள்ளும் முதல் நீள் பயணம் என்பதால், ‘என்ன செய்யப் போகிறானோ?’ என்னும் பதட்டம் கலந்த ஆர்வத்தோடவே இருந்தோம்.
ஆனால் நாங்கள் சற்றும் எதிர்பாராத வகையில், ‘நான் வேடிக்கை பார்ப்பவன்’ என்பதை நிரூபிக்கும் விதமாய், அத்தனை மகிழ்வோடு வழிநெடுகிலும் உள்ள மரஞ்செடிகொடிகள், மலை, ஆறு, ஆடு, மாடு, மனிதர், வாகனம்… என ஒன்றை விடாமல் வரிசையாக வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தது, நாங்கள் ஒருபோதும் எதிர்பாராதது.
அந்த வகையில் எங்களைப் போல அவனும் ‘வேடிக்கை பார்ப்பவனாய்’ இருப்பது கண்டு பெரிதினும் பெரிதாய் மகிழ்ந்திட்டோம். ஆம், ஆம்!
*