ஐபக்கம் – 024 : சொட்டு மருந்து

#மார்ச்03,2024

இன்று போலியோ சொட்டு மருந்து தினம் என்பதால், ஐ’யை பக்கத்தில் இருக்கும் அரசுப் பள்ளிக்கு கூட்டிப் போயிருந்தோம். ஏற்கனவே தடுப்பூசி போடும்போது போட்டிருந்தார்கள் என்றாலும், தனியாகப் போடுவது இதுதான் முதல் தடவை.

நான் சிறுவனாக இருக்கையில் எங்களூர் பள்ளியில் சொட்டு மருந்து போடும்போதும், ஊருக்கு மருத்துவர் வரும்போதும் ஓடிப்போய் போடச் சொல்லி போட்டுக் கொண்டதையும், சத்து மாத்திரை தருமாறு கேட்டு அடம்பிடித்து வாங்கி உண்டதையும் ஐயாவும் அம்மாவும் வேடிக்கையாகச் சொல்வார்கள்.

அந்தச் சம்பவங்கள் எல்லாம் ஏனோ இன்று, ஐ’க்கு சொட்டு மருந்து போட்டுவிட்டு வரும்போது நினைவுக்கு வந்து எனக்கு நானே புன்னகைத்துக் கொண்டேன்.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=