இற்றைச் சருகு

ஒற்றை துளியாக்கி ஆகாயத்தை
உள்ளங்கையில் ஏந்தநினைத்து
இல்லாத பெயரொன்றை சூட்டிக்கொள்ள
ஒட்டியிருந்த வாசம்
ஒடுங்கிப்போய் மறைந்தது
தூக்கணாங்குருவிக் கூட்டில்
புற்றுமண்ணில் செய்த சிலைக்கு
கால்களே கைகளாக
சுருங்க மறுத்தது தொட்டாச்சுருங்கி
தட்டானின் பாதையில் தொலைய
தாகத்தோடு போனதற்கு தண்டனையாய்
குளவிக் கூண்டில் சிக்கிக்கொள்ள
மழமழக் கல்லாய் தேயலுற்றேன்
பட்டாம்பூச்சி வழிகாட்ட
அத்துளியை ஏந்தமுற்பட்டு
அடித்துப்போனேன்
இற்றைச் சறுகாகி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=