மெய்மைப் புணர்ச்சி

புணர்ச்சியின் நீர்மக் கயிற்றில்
விரும்பிச் சிக்குகையில்
காமத்தியாகிவிடுகிறாள்
கரப்பான் பூச்சியைக் கண்டு
பயந்தோடும் பாவத்தி

உச்சம் நெருங்குகையில்
உச்சிமலையேறுகையிற்கொள்ளும் மகிழ்வுபோல
முடியும்வரை சுவைத்துவிடுகிறாள்
மிச்சமீதி வைக்காது

நேரான பாதை அவ்வளவாக
பயணத்தில் இனிக்காததுபோல்
இனிப்பதில்லை
புணர்ச்சியின் மென் வெளியில்

ஆடவரின் காமம்போல்
அவளினத்தது இல்லையெனினும்
மெய்யாய்ப் படர்ந்திட்ட
பொய்யென்றுணர்க
மதிக்காது புறமொதுக்கல்

அழகானதையெலாம் விஞ்சக்கூடியது
பேரானந்தத்தின் உச்சத்தில் சிந்துமவள்
காமநேம உணர்வெளிப்பாடு

தொடக்கத்தின்
தீ மூட்டலில் இருக்கும் ஈடுபாடு
இருக்கவேண்டுவாள்
முடிவின் நீர் அணைப்பிலும்

செவ்வாய்க்கு ராக்கெட்டனுப்பும் ஆணுலகம்
சற்றும் எத்தனிப்பதில்லை
அவளின் ஆசைமிகு
செவ் வாய்க்கோர் இனிப்பு முத்தமிட

அத்யாதியாய் சுழலுமிவ்வுலகம்
அவளின் இத்யாதியை
என்றுணர்கிறதோ
அன்றே
மெய்மைமிகுப் புணர்ச்சியாகும்
புணர்ச்சி
புணர்ச்சி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=