தன்யமனம்
உள்நோக்கம் கொண்ட
இலவச அன்பில்
விரும்பிதான் விழுந்தேன்
சட்டென எக்கியெழ
காரணமும் ஆயுதமும் இருந்தும்
முற்படவில்லை
ஆல்விதையளவும்
அன்பின் பிசுபிசுப்பில்
அந்தம்வரை தோய்ந்து
நசநசத்து நடுங்கி
துண்டிக்கப்பட்ட மண்புழுவாய்
உள்ளுக்குள் அழுதுபுலம்பி
சிறுபுள்ளியாய் உயிர்
அதிரவுணர்ந்தபோது
மாறி
சற்றொப்ப மீறி
இதுகாறும் ஏகாத
புதியதொரு திசையில்
வலிந்து திரும்பியது
வீரலிட்ட தன்யமனம்
அப்படிதான்
அப்படிதான்
முகம்மாற்றி
முகவரிமாற்றி
தனதிருப்பை
தணலெனப் பதிக்கிறது
காலத்துக்கும்
காலத்துக்கும்
காலாகாலத்துக்கும்