பினைவாட்டம்

வாசஞ்சனித்த மேனியில்
நாவாசிப்பு நிகழ்த்தி
முடிக்கும் தருவாயில்
’ஆ’வெனக் கசிந்தது
உள்ளிருந்தொரு சன்னக்குரல்

விரல்நுனி மகிமையுணர
துளித்துளியாய்த் தவித்ததேகம்
அனுமதியின்றி குதித்தது
அடக்கமுடியாத
ஆர்வத்தீயில்

மேகம்செல்லும் தூரத்துக்கு
மனம் செல்ல
வெற்றுடம்பில் பூத்தது
விடுதலை ரகசியங்கள்

அடிமுடிக்காணயேகிய
தீநீர் பாகம்
தேடித்தேடி சேர்ந்தது
ஒற்றை தேகக்காட்டில்
சின்னஞ்சிறு புள்ளியாய்

இசைய
இசைய
இனிக்க
இனிக்க
வாசஞ்சனித்த மேனியில்
முதல் தடவையாக
உச்சம் பிறந்தபோது
சொச்சத்தில்
சொச்சத்தில்
சொச்சமாக
துளிர்த்தது
பினைவாட்டத்தின்
பிழையொன்று
சரியின் மிகச் சரியாக

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=