கசப்பினிப்பு

நான்காமடுக்கு எடுக்கையில்
நுனிமூக்கில் கொட்டியது
வீடிழந்த தேனீ

வலிவிட
சுவைமீது பற்றுகொண்ட
மனமும் நாவும்
பொருட்படுத்தவில்லை என்னை

ஞானாசாறு தடவியும்
ஒன்றிரண்டு கடிக்காளானது
ஆச்சர்யத்தின் சிறுபிள்ளைதான்

ஐந்தாமடுக்கில் வியக்க
ஆறாமடுக்கு இன்னுமென்றது

ஏழெட்டென தொடர
துளித் துளியாய் சிதறியது
நிமிடங்களில்

தித்தித்துக் கிடந்தது
கல்லும் மண்ணும்

ஒருவரின் மகிழ்ச்சி
ஒருவரின் துக்கமாக
கசந்தது தேன்
தன்னைவிட
மிக அதிகமாக

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=