திறச்சாவி


உடலுறவு மையமாக வைத்து
பின்னிய உறவுக்கு
பிரியங்களே திறப்புசாவி
திறந்து மூடி அல்லது
மூடித்திறந்து கவியும் பொழுதுகளில்
விநாடிகள் வீணையாய் சுரந்தது
இம்சிக்கும் ஆசைகள்
வம்பிழுக்கும் சொற்கள்
இடைவெளிகள் அனைத்தும் நிரப்ப
பொட்டுமுத்தம் போதுமாயிருந்தது
வக்கித்து நிற்கும்போதும்
திக்கித்து உடைகையிலும்
ஆறுதலுரைத்த வானம்
வெகுதொலைவு சென்றுவிட்டது
இருப்பினும்
உடலுறவு மையமாக வைத்து
பின்னிய உறவுக்கு
பிரியங்களே திறப்புசாவி
புத்திகெட்ட மரணத்திலும்

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=