மிச்சம்

அலங்கரிக்கப்பட்ட பொய்களில்
அழுந்த அழுந்த மூழ்கி
தக்கையாய் மேலெழும் நொடிகளில்
கொஞ்சகொஞ்சமாக
தின்றேனென்னை

சுவையில் சப்புக்கொட்டிய நாவை
துண்டித்து
காலடியில் மிதித்தபோது
பாதி கடந்திருந்தேன்

கண்ணீரின் பிசுபிசுப்பில்
உப்புச்சுவையின் கரிகரிப்பில்
நடுங்க நிற்கையில்
சிறு புள்ளியளவுதான்
மீதமிருந்தேன்

அடிமுடி சுருங்கி
அகமது இழந்து
சிறுமீன் முட்டையாக
ஆலாகும் நம்பிக்கையொன்றுதான் மிச்சமிருந்தது
துளிரத்துளிர

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=