சொல்லன்றி எதுவுமற்றவன்! – 360

உங்களது படைப்புகள் யாவும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருக்கிறதே. அதிலும் அதிகம், அதற்குமுன் இல்லாத புதுவகையில். இது திட்டமிட்டு செய்வதா? இல்லை, அதுவாக அமைவதா?

சிலவற்றை திட்டமிட்டு செய்கிறேன். சில அதுவாக அமைகின்றது. உதாரணமாக, அகத்திரியில் ஏற்றிய நெருப்பு, ஏலேலோ பாட்டு, எங்க கல்யாணம் போன்றவை அதுவாக அமைந்தது. ஐயன் சொல், நிலைத்திணை போன்றவை திட்டமிட்டு உருவானது.

நீங்கள் கவனித்திருக்கலாம். படைப்பாளர்களில் பலர் ஒரே போல எல்லா படைப்புகளையும் எழுதுவார்கள். அதில் எனக்கு அவ்வளவாக உடன்பாடில்லை. அதனால் முடிந்தவரை முந்தைய படைப்புக்கும் அடுத்த படைப்புக்கும் தொடர்பில்லாத புதுவிதத்தில் எழுத முற்படுவேன். அப்படித்தான் இந்த சுயநேர்காணல்கூட இப்போது உருவாகி வந்திருக்கிறது. இனிவரும் காலங்களிலும் அவ்வாறுதான் எனது பெரும்பாலான படைப்புகள் இருக்கும்.

[இன்னும்]

*

சொல்லன்றி எதுவுமற்றவன்! – 359

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=