சொல்லன்றி எதுவுமற்றவன்! – 330
அதேபோல, இயற்கை வளங்களும் பெருமளவில் சூறையாடப்பட்டனவே?
எண்ணும்போதே வலிக்கிறது. இன்றைக்கு தமிழகத்தில் இருக்கக்கூடிய எந்த நதியும் உயிர்ப்புடன் இல்லை. மலைகளும், காடுகளும், ஏரிகளும், குளங்களும் அதன் முழுமுகத்தோடு இல்லை. எல்லாம் பேராசை பிடித்த மனிதனால் நிகழ்ந்தவை. வேறு எந்த உயிரினங்களும் காரணமல்ல.
மனிதன் ஆறறிவு உடையவன். மேன்மை மிக்கவன். அது இது என்று பெருமை பேசுகிறோம். ஆனால், ஓரறிவுள்ள மரங்களைக் காட்டிலும் மிகக் கீழ்மையாக நடந்துகொள்கிறான். இவையெல்லாம் நிச்சயம் அழிவுக்கே கொண்டுபோய் நிறுத்தும்.
[இன்னும்]
*