சொல்லன்றி எதுவுமற்றவன்! – 323
ஒரே ஒருவருக்கு நன்றி சொல்லச் சொன்னால் யாருக்கு சொல்வீர்கள், ஏன்? (நிச்சயம் இதற்கான பதில் நீங்கள் ஒருபோதும் காணாதவராக அவர் இருக்கவேண்டும்)
(சட்டென பதில் சொல்லாமல் தன் மேசைமேல் இருந்த நகர்பேசியை எடுத்துத் திறந்து, கர்நாடக மாநிலம் துங்கபத்திரை நதிக்கரையில் உள்ள விஜய நகரமான ஹம்பியின் கலைப்பொக்கிஷங்களில் ஒன்றான விட்லர் கோயில் கல் ரதத்தின் ஒளிப்படத்தை பார்த்தபடி)
சுவாமி வித்யாரண்யருக்குதான் சொல்வேன். ஏனெனில், அவர்தான் இன்றைக்கு நாம் பார்க்கக்கூடிய கலைச் செல்வங்கள் பலவும் அழியாமல் உயிர்த்திருக்கக் காரணம்.
இங்கே பலருக்கு அவர் பற்றி தெரியாமல் இருக்கலாம். அவர் மட்டும் அன்று படைவீரர்களான ஹரிஹ, புக்கா சகோதரர்களை அழைத்து விஜயநகர சாம்ராஜ்யத்தை நிறுவச் சொல்லாமல் போயிருந்தால், அதன் பிரதான நோக்கமாக அழிந்த கலைச் செல்வங்களை மீட்டெடுப்பதும், அழியும் நிலையில் இருப்பவற்றை காப்பதும்; இன்னும் இன்னும் புதிதாக எண்ணற்ற கோயில்களையும், மண்டபங்களையும், கோபுரங்களையும், சிற்பங்களையும் நிர்மானிப்பதும் இல்லாமல் இருந்திருந்தால், இன்றைக்கு நாம் பார்க்கும் கலைப் பொக்கிஷங்கள் பல இருந்த இடம் தெரியாமல் போயிருக்கும். நாம் கண்டு பெருமைப்படும்படியோ, ரசிக்கும்படியோ, உவகையுறும்படியோ, படைப்பூக்கம் அடையும்படியோ ஒன்றுமே இருந்திருக்காது.
ஆகையால், அதற்கெல்லாம் மூலக் காரணமான அந்தத் தூய மனத்தினரான சுவாமி வித்யாரண்யர்க்கு நான் என்றும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
[இன்னும்]
*